உளறிக் கொட்டி வாங்கி கட்டிய ‘ஸ்குரு’மூர்த்தி

0
603

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி திருச்சியில் நடந்த விழாவில், ‘ நான் கூறியதாலேயே ஜெயலலிதாவின் நினைவிடத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் அப்போது தியானம் மேற்கொண்டார். ஓபிஎஸ் தியானம் செய்ததன் மூலம் ஒரு மாற்றம் ஏற்பட்டது. பிரிந்து கிடந்த அதிமுகவை நான்தான் ஒருங்கிணைத்தேன்’ என்று பேசினார்.
இதனால் அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே , பாஜக கையசைவுக்கு அதிமுக ஆடுவதாக விவர்சனம் உள்ள நிலையில், பாஜகவின் ஊதுகுழலான குருமூர்த்தி அதிமுக கட்சி இணைப்பின் சூத்ரதாரியாக இருந்ததாக அனைவரும் நம்பினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தஅமைச்சர் ஜெயக்குமார், குருமூர்த்தியை விளாசித்தள்ளிவிட்டார். ‘குருமூர்த்தியின் பேச்சு திமிர்வாதத்தின் உச்சம், இவ்வளவு திமிர் கூடாது; நாவடக்கம் தேவை. அதிமுகவின் மீது கைவைத்து வாங்கிக் கட்டிக் கொண்ட வரலாறும் குருமூர்த்திக்கு உண்டு’ என்று அவர் சாட்டையை சுழற்றியதும், சுருட்டிக்கொண்ட ஸ்குருமூர்த்தி, ‘ஓ பி எஸ் சிடம் பேசிய போது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள்? என்கிற அர்த்தத்தில் தான் கேட்டேன். அது அவருக்கும் தெரியும். அவர் தான் அதிமுகவை சசிகலா விடமிருந்து காப்பாற்றினார். அவர் மேல் எனக்கு மிகவும் மரியாதை’ என்று உளறிக்கொட்டியுள்ளார்.
ஏற்கெனவே, அ.தி.மு.கவினரை ‘ஆண்மையற்றவர்கள்’ என்ற பொருள்படும்படி பேசிவிட்டு, ‘திராணியற்றவர்கள் என்ற பொருளில்தான் சொன்னேன்’ என்று தலையை கீழே போட்டவர் குருமூர்த்தி.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவ அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, ‘ தற்போதைய காலகட்டத்தில் 30 சதவிகித பெண்களே பெண்மையுடன் இருக்கின்றனர். அவ்வாறு பெண்மையுடய பெண்களை மட்டுமே தெய்வமாகக் கருதுகிறேன்’ என்றார்.
இப்போதும். ‘ நீங்க ஆம்பளையா?’ என ஓபிஎஸ்சிடம் கேட்டேன்..!: என்கிறார். ஆண், பெண் என்பதில் மேல், கீழான தத்துவ சிந்தனை கொண்ட பழம்பஞ்சாங்கமாகவே அவர் காட்சி தருகிறார்.
இப்படி மானுட தர்மம், அரசியல் நாகரீகம் எதையும் அறியாத குருமூர்த்தி ஒரு பத்திரிகையின் ஆசிரியர் என்பதை வேதனையுடன் ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது.
அதேவேளை, ஓபிஎஸ் பற்றிய அவரது பேச்சுக்கு இதுவரை சம்பந்தப்பட்ட ஓபிஎஸ் மறுப்பு எதுவும் தெரிவிக்காதது அவர் எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதை ஒப்புக்கொள்வதாகவே இருக்கிறது. அடிமை சிந்தனையால் பதவி பிச்சை பெறும் மனோபாவம் நமது அரசியல் தலைஅவ்ர்களிடமிருந்து அகன்றால் மட்டுமே அவர்களால் மக்களுக்கு சுதந்திர ஜோதியை ஏற்ற முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here