கோவில்பட்டியில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன் – ஆறு நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
குற்றத்தை ஒத்துக் கொள்ள சொல்லி அப்பகுதி பொதுமக்களை போலீசார் கட்டாயப்படுத்துவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவனின் தாயை வலுக்கட்டாயப்படுத்தி போலீஸ் ஜீப்பில் திணித்து அழைத்துச் சென்றனர்.









