மதுரை ஆனையூர் பகுதியிலுள்ள இலங்கை தமிழர்களுக்கான முகாமில் வசிக்கும் ஜெயச்சந்திரன் மகன் கோகுலன் என்ற 27வயது இளைஞர் கடந்த சில ஆண்டுகளாக மது,கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்திற்கு அடிமையான நிலையில் தினசரி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டதோடு குடியிருப்பு பகுதிகளில் வாக்குவாதம் செய்துவந்துள்ளார்.
மது வாங்குவதற்காக அடிக்கடி வீட்டில் உள்ள பொருட்களை விற்றுவந்துள்ளார். இந்நிலையில் இளைஞர்
போதை பழக்கத்திற்கு அடிமையானதை பெற்றோர்கள் கண்டித்ததால் நேற்றிரவு திடிரென தனது வீட்டில் இருந்தபடியே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

இதையடுத்து 80சதவித தீக்காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . இளைஞரின் தற்கொலை குறித்து கூடல்புதூர் போலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.