சாத்தான்குளம் தந்தை, மகன் கொட்டடி கொலையில் அவர்களை தாக்கிய போலீசாருள் முத்துராஜ் என்பவர் திடீரென தலைமறைவானார்.
மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் அவரை தனிப்படையினர் தீவிரமாக தேடிவந்தனர். அவரது கைபேசி அலைவரிசையை வைத்து தேடினர்.
அப்போது ஓட்டப்பிடாரம் பகுதியில் அவர் பதுங்கியது தெரிந்தது. ஓட்டப்பிடாரம் அருகே காட்டுக்குள் தேடியபோது முத்துராஜின் இருசக்கர வாகனம் அனாதையாக கண்டு பிடிக்கப்பட்டது. அதை பசுமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தனிப்படையினர் மீண்டும் தீவிர தேடலில் உள்ளனர்.