ஆழ்வையில் கண்பரிசோதனை முகாம்

0
1359

தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கிராம உதயம் மற்றும் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் ஆழ்வார்திருநகரியில் நடந்தது.
கிராம உதயம் கிளை மேலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். சங்கரா கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சண்முகசுந்தரம், தன்னார்வ தொண்டர் முத்துராஜ், இலவச மருத்துவப்பிரிவு துறை பொறுப்பாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். தனி அலுவலர் ராமச்சந்திரன் வரவேற்றார். ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. சுரேஷ்குமார் தொடங்கிவைத்தார்.
முகாமில் பங்கேற்றவர்களில் 20 பேர் இலவச கண்அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில், முருகசெல்வி, சண்முககனி, உஷா, ஆயிஷா, சித்திமா, ஆனந்தசெல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here