அதிமுக பிரமுகர் மீது பொய் வழக்கு

0
1068

கூடங்குளத்தை சேர்ந்த நேவிசன் லியோன் அதிமுக பிரமுகர். இவரை நேற்று தனிப்பிரிவு போலீசார் பிடித்துச்சென்றனர். கூடங்குளம் போலீசார் அவர் மீது கள்ள விற்பனைக்கு மது பாட்டில் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே செய்தியாளர் ஒருவர் தனிப்பிடிரு போலீஸ்காரர் ஒருவரிடம் கைபேசியில் பேசிய பேச்சு திடீரென சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது. அதில், நேவிசனை வெறுமனே பிடித்துச்சென்று மது புட்டிகளை வைத்து வழக்குப்பதிவு செய்த ரகசியத்தை போலீஸ்காரர் புட்டு வைத்தார். அப்படியானால், வழக்கு போடுவதற்காகவே மது புட்டிகளை பதுக்கி வைத்த போலீசார் மீது வழக்கு உண்டா என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here