நெல்லை _ குமரி நான்குவழி தேசிய நெடுஞ்சாலையில் மறுகால்குறிச்சி குளமருகே சுங்கச் சாவடி உள்ளது.
சாவடிக்கு முன்பு ஸ்ரீவரமங்கை வழியாக கள்ளிக்குளம், மீனவன்குளம் உள்ளிட்ட 10 ஊர்களை இணைக்கும் சாலை செல்கிறது. இந்த சாலை டோல்கேட்டை தாண்டி நான்குவழி சாலையுடன் இணைகிறது.
நெடுஞ்சாலையை நான்குவழியாக அகலப்படுத்தும் முன்பிருந்தே இப்பகுதி மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சுங்கச்சாவடி ஒப்பந்த நிறுவனத்தார் இந்த வழியாக வாகனங்கள் வந்தால் சாவடியில் வசூல் குறையும் என்பதற்காக சட்ட விரோதமாக அத்துமீறி இந்த சாலையில் பள்ளம் தோண்டியும் சேதப்படுத்தியும் அட்டூழியம் செய்துவருகின்றனர்.
சமீபமாக, இந்த சாலையில் பெரிய பாறாங்கற்களைப்போட்டும், டிராக்டர் ஒன்றை நிரந்தரமாக குறுக்கே நிறுத்தியும் தடுப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இது இப்பகுதி மக்களின் போக்குவரத்துக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் என்று பொதுமக்கள் குமுறுகின்றனர். தேர்தல் நேரத்தில் கூட ஆணவமாக செயல்படுவது கண்டனத்துக்குரியது. உடனடியாக இதை அகற்ராவிட்டால் விரைவில் முன்னறிவிப்பின்றி சாவடி முன்பு சாலை மறியலில் ஈடுபடுவோம் என வட்டார இளைஞர்கள் கூறினர்.









