சொம்புக்குள் வைத்து பூஜை செய்வதாக கூறி 5 பவுன் நகையை அபகரித்தவர் கைது

0
650

கயத்தாறு இந்திராநகர் நடு காலனியை சேர்ந்த தங்க மாரி முத்து மனைவி முருக லட்சுமி (42). இவரிடம் கோவில்பட்டி முத்துநகர் சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் முத்துராமலிங்கம் குடும்ப கஷ்டத்தை போக்க பூஜை செய்வதாக கூறியுள்ளார் பூஜையின் போது நீர் நிறைத்த சொம்புக்குள் நகையை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை கேட்டுப் பெற்றுள்ளார்

அவ்வாறே ஒரு சொம்பு க்குள் நகை வைப்பதாக நடித்த முத்துராமலிங்கம் அதை நைசாக அபகரித்தார்.

இடையில் இந்த மோசடியை அறிந்துகொண்ட முருக லட்சுமி, கயத்தாறு போலீசில் புகார் செய்தார்.போலீசார் விசாரித்து முத்துராமலிங்கத்தை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 பவுன் நகை மீட்கப்பட்டது. இது போல் பல இடங்களில் அவர் மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here