கோவில்பட்டியில் ஒய்வு பெற்ற அரசு அலுவலர் வீட்டில் நகை திருடப்பட்டது. அதை திருடியவர்களை போலீசார் கைது செய்தனர். அந்த நகைகளை திருடியவர் நெல்லை டவுணில் உள்ள நகை கடையில் விற்றதாக கூறியதையடுத்து பாஷா என்பவருக்கு சொந்தமான நகை கடையில் சோதனையிட்டு நகையை கைப்பற்றியதோடு உரிமையாளரையும் ஒரு விற்பனையாளரையும் கைது செய்தனர்.
இதை கண்டித்து நெல்லை டவுண் நகை பஜாரில் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் குவிக்கப்பட்டனர். சமாதான பேச்சுவார்த்தை நடந்ததையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்.