கல்லிடைக்குறிச்சி அறம் வளர்த்த நாயகி அம்மன் குலசேகரமுடையார் ஆலயத்தில் இருந்த உற்சவமூர்த்தியான நடராஜர் சிலை 37 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டது.
அது ஆஸ்திரேலியாவில் இருப்பதாக விசாரணையில் தெரிந்தது. சிலை கடத்தல் தடுப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் அதை மீண்டும் ஆலயத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர். அதன்படி கடந்த வாரம் நாட்டுக்குள் வந்த சிலை இன்று கல்லிடைகுறிச்சி ஆலயத்துக்கு கொண்டுவரப்பட்டது.
பொதுமக்கள் மேள, தாளம் வாண வேடிக்கையுடன் மலர் தூவி நடராஜரை வரவேற்றனர்.