அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் கம்பியால்அடித்துக்கொலை

0
914

தட்டார்மடம் அருகே உள்ள அரசூர் பூச்சிக்காட்டை சேர்ந்தவர் மகாராஜன்(32). பால்பண்னை நடத்திவருகிறார். அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளராக இருந்துவந்தார். இவரது எதிர் வீட்டில் வசிக்கும் கந்தசாமிக்கும் இவருக்குமிடையே பகை இருந்துவந்துள்ளது.
இன்று இரவு 7.30 மணி அளவில் பால் எடுப்பதற்காக பைக்கில் அருகில் உள்ள மேட்டுவிளைக்கு மகாராஜன் சென்றபோது கந்தசாமி தாக்கியுள்ளார்.
இதில் பலத்த அடிபட்டு மயங்கி விழுந்த மகாராஜன் இறந்தார். இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் விசாரித்து கந்தசாமியை கைது செய்தனர்.
இறந்த மகாராஜனுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here