பள்ளிக் கல்வித் துறை மறுசீரமைப்பு அரசாணை 151படி திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தை அகற்றும் முடிவை தமிழக அரசு கைவிட கோரி தொடர்ந்து விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், சமூகநல அமைப்புகள் ஒருங்கிணைந்து போராடிவருகின்றன.
இந்நிலையில் இன்று காலை திடீரென மாவட்ட கல்வி அலுவலகத்தின் கோப்புகள், இருக்கைகள் உள்ளிட்ட உபகரணங்களை லாரியில் ஏற்றி எடுத்துச் செல்ல முயன்றபோது லாரியை சிறைப்பிடித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருச்செந்தூர் தாலுகா காவல்துறையினர் லாரியை சிறைப்பிடித்த அனைவரையும் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் அனைவரையும் மாலை விடுவித்தனர்.