சுப்பிரமணியபுரம் இசக்கியம்மன் கோயில் கொடை விழா

0
1240

சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் பிரசித்தி பெற்ற இசக்கியம்மன் கோயில் உள்ளது. இக் கோயில் கொடை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இன்றுவரை சுவாமிக்கு அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. பெண்கள் நேற்று குத்துவிளக்கு பூஜை நடத்தினர். இன்று இரவு பிரபல மருத்துவ இசைஞர் பிரேமச்சந்திரனின் ‘பிரேம கானங்கள்’ இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நாளை இரவு அம்மன் ஊர்வலம், வானவேடிக்கை நடைபெறுகிறது.நாளை மறுநாள் மதியம் வரை ஏழு வேலை வில்லுப்பாட்டு நடக்கிறது. பகலில் அன்னதானத்துடன் கொடை விழா நிறைவு பெறுகிறது

விழாவுக்கான ஏற்பாட்டை தர்மகர்த்தா செல்லபாண்டியன் விழாக்குழு தலைவர் பாலச்சந்திரன் ஆகியோர் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here