கோவையில் பெண்ணைக் கொன்ற ‘ரெடிமேடு’ கணவன் கைது: ஆண்மையற்றவன் என்று சொன்னதால் கொலை செய்ததாக வாக்குமூலம்

0
1203


தேனி பெரியகுளத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் கோவை தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 10ஆம் தேதி பாண்டியராஜன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வரவே போலீசார் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது கலாமணி அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுநாள்வரை கலாமணி உடன் தங்கியிருந்த பாண்டியராஜன் அவர் இறந்த பின்பு தலைமறைவாகி விட்டார். இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை தேடினர். பாண்டி ய ராஜனை பிடிக்க தொண்டாமுத்தூர் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. பாண்டியனை தேடி அவரது சொந்த ஊரான ஜெயமங்கலத்திற்கு போலீசார் விரைந்தனர். ஆனால் அவர் பாண்டியராஜன் அங்கு வரவில்லை எனவும் தங்களுக்கு ஏதும் தெரியாது எனவும் அவரது குடும்பத்தார் கூறியுள்ளனர். போலீசார் அங்கேயே முகாமிட்டு அவரை தேடி வந்தனர்.‌


இந்த நிலையில் தனிப்படை போலீசாருக்கு பாண்டியராஜன் பெரியகுளம் அடுத்த உசிலம்பட்டி பகுதியில் அவரது நண்பனான கரகாட்ட கலைஞர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது. போலீசார் பெரியகுளம் சென்ற போது அங்கு குறிப்பிட்ட அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது இதனால் அருகே விசாரித்தபோது அந்த வீட்டில் யாரும் இல்லை என தெரிய வந்தது. இருப்பினும் சந்தேகம் அடைந்த போலீசார் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று சோதனை செய்தனர். அங்கு சமையல் அறையில் பதுங்கியிருந்த பாண்டியராஜனை அதிரடியாக கைது செய்து பின்னர் அவரை பெரியகுளத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பாண்டிய ராஜன் போலீசாரிடமிருந்து தப்பிக்க மொட்டை அடித்து இருந்தது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தேனியை சேர்ந்த பாண்டியராஜன் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பொள்ளாச்சி வடக்கு பாளையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த திருமணமான கலாமணி என்பவர் ஹோட்டலுக்கு அடிக்கடி வந்து அடிக்கடி சந்தித்து கொண்டதால் இரண்டு பேரும் கும் இடையே நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி காதலை இந்த நிலையில் பாண்டியராஜன் வேலை பார்த்து வந்த திடீரென மூடப்பட்டது. இதனால் அவருக்கு வேலை இல்லை . கலா மணியிடம் தெரிவித்து வேலை தேடி கோவைக்கு செல்ல உள்ளேன் என கூறியுள்ளார்.

இதையடுத்து பாண்டியராஜன் கலாமணியை அழைத்துக்கொண்டு தொண்டாமுத்தூர் வந்தார். அங்கு ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு அந்தப் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி ஓட்டல் வேலை செய்து வந்தார். கடந்த 10ஆம் தேதி மாலை இரண்டு பேரும் பாண்டியராஜன் வேலை பார்க்கும் ஓட்டல் உரிமையாளரை சந்தித்து சென்று சென்றுள்ளனர். அங்கு அவரை சந்தித்து வேலை பார்த்து அதற்கான பணத்தை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டனர். செல்லும் வழியிலேயே டாஸ்மார்க் கடையில் மூன்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். பின்னர் இரண்டு பேரும் சேர்ந்து வீட்டில் வைத்து மது குடித்தனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் பாண்டியராஜன் மனைவியை திட்டிவிட்டு சாப்பாடு வாங்கி விட்டு வருவேன் எனக் கூறி விட்டு வெளியில் சென்றார். அரை மணி நேரம் கழித்து பாண்டியராஜன் வீட்டிற்கு வந்தார் இரண்டு பேரும் ஒன்றாக மது அருந்திகொண்டு சாப்பிட்டு அப்போது தகராறு உருவாகியது. இதில் ஆத்திரம் அடைந்த பாண்டிராஜன் வீட்டில் இரு ந்த கட்டையை எடுத்து மனைவியின் தலையில் சரமாரியாக பலத்த காயம் அடைந்த அவர் சத்தம் போடவே வெளியில் சத்தம் கேட்டு விடக்கூடாது என நினைத்து அவர் முன் துணியை எடுத்து முகத்தை இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

தன்னை ஆண்மை இல்லாதவன் என கூறியதால் ஆத்திரமடைந்து கொலை செய்ததாக கூறினான். கைதான பாண்டியராஜனை போலீசார் இன்று தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here