பாளையங்கோட்டை என்ஜிஓ ஏ காலனி செயின்ட் சேவியர்ஸ் நர்சரி & பிரைமரி பள்ளியின் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
முதல் வகுப்பில் மாணவர் சபரி இஷாந்த் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் பரிசு பெற்றார். இரண்டாவது வகுப்பில் மாணவர் ரியோ மார்வினும், மூன்றாவது வகுப்பில் மாணவி மீரஜாவும், நான்காவது வகுப்பில் மாணவி பிளெஸ்ஸியும், ஐந்தாவது வகுப்பில் மாணவி ரெனிஷாவும் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றனர். அதைப்போல இரண்டாவது மற்றும் மூன்றாவது மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
மேலும் விடுமுறை எடுக்காமல் அதிக நாட்கள் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அழகான,சிறப்பான கையெழுத்துடைய மாணவ, மாணவியருக்கும் பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டன. அனைத்து மாணவ, மாணவியருக்கும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
காவல்துறை நெல்லை சரக டிஐஜி மூர்த்தி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள், மரக்கன்றுகளை வழங்கினார். நிகழ்வில் பள்ளி முதல்வர் சந்தனமேரி மற்றும் வரம் அறக்கட்டளை நிறுவனர் நாகராஜன், விநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை ரதி மற்றும் பீமு செய்திருந்தனர்.








