கோவை
கோவைப்புதூர் விநாயகா நகர் பகுதியைச் சேர்ந்த சுமந்த் குமார் என்பவரின் மனைவி அஸ்வினி (24) .இவர்களுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. பிடெக் பட்டதாரியான சுமந்த் குமாருக்கு திருமணத்தின்போது 20 லட்ச ரூபாய் பணமாகவும் 100 சவரன் தங்க நகைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது . சுமந்த் குமார் சொந்தமாக தொழில் செய்கிறேன் என்று கடந்த இரண்டு ஆண்டுகளில் வரதட்சனையாக கொடுத்த பணம் மற்றும் நகைகளை செலவு செய்துள்ளார். மேலும் சொந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று மனைவியிடம் கூறியுள்ளார. இன்னும் 10 லட்ச ரூபாய் பணத்தை வாங்கி வரவேண்டும் என்று அஸ்வினியை சுமந்த் குமார் கேட்டு நச்சரித்துள்ளார்.
அஸ்வினி அதற்கு மறுத்துள்ளார். இதை அடுத்து சுமந்த் குமார் தனது மனைவியை அடித்து உதைத்து வீட்டிலிருந்து துரத்தி உள்ளார். இதுகுறித்து அஸ்வினி குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் சுமந்த் குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












