திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் கடந்த 2012, 2013,2014 ஆகிய ஆண்டில் நகராட்சியில் மேலாளராக இருந்த சுரேஷ், கணக்காளர் முரளி காந்த், உதவியாளர் குருசீனிவாசன் ஆகியோர் ஊழியர்களின் வைப்பு நிதி, கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கிய உதவி தொகை பணம் நகராட்சி நிர்வாகத்திற்காக பயன்படுத்தப்படும் பணத்தை கையாடல் செய்ததாக புகாரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 2014ஆம் ஆண்டு 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஒப்புகொண்டனர்

அதன்பேரில் 3பேரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார் அதைதொடர்ந்து வாணியம்பாடி நகராட்சியில் அவர்களுடன் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் இன்று லஞ்ச ஒழிப்பு காவல்துறை ஆய்வாளர் விஜய் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் சார் நிலைக்கருவூலத்திற்கு சென்று நகராட்சி சம்பந்தமான ஆவணங்களைக் கேட்டு விசாரணை செய்தனர்.














