மகராஷ்டிரா இழுபறி: கவர்னரை சந்திக்கப்போகும் சிவசேனா

0
1339

2014ல் ஜெயித்த பின்பு கூட்டணி, 2019ல் களமிறங்கும்போதே கைகோர்ப்பு. ஆனாலும், எலியும் தவளையுமாகவே பாஜக சிவசேனா கூட்டணி இருந்துவந்துள்ளது.
தேர்தல் முடிந்ததிலிருந்தே ஃபிப்டி, ஃபிப்டி ஃசேர் கேட்டு பாஜகவை மிரட்டிவந்தது. அதிலும் நீ 2 1/2 ஆண்டு, நான் 2/12 ஆண்டு என முதல்வர் இருக்கையை பங்கு போட, பாஜக திகிலடைந்துவிட்டது.
எப்படியும் வழிக்கு வந்துவிடும் என நம்பி சட்டமன்ற குழு தலைவராக ஃப்ட்நாவிசை தேர்ந்தெடுத்து தயாராக வைத்திருக்கும் நிலையில், கட்சி பத்திரிகையான சாம்னாவில் தங்களுக்கு 170 உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக வெளியிட்டு மீண்டும் பாஜகவுக்கு பீதியூட்டியுள்ளது. அத்தோடு தங்கள் தரப்பிலும் சட்டமன்ற குழு தலைவரை தயார் செய்துவிட்டது.
இவர்கள் சண்டைக்கிடையே, பருவம் தவறிய மழையால் விவசாயம் பாதிப்படைந்துள்ள சூழலில் பதவியேற்று ஆட்சி செய்யாமல் தகராறு செய்வதால் இரு தரப்பாரையும் விட்டுவிட்டு தன்னை முதல்வராக்குமாறு விவசாயி ஒருவர் கவர்னருக்கு மனு கொடுக்குமளவு விடயம் காமெடியாகிவிட்டது.
இந்நிலையில், இன்று அவுரங்காபாத்தில் பாதிக்கப்பட்ட பயிரை பார்வையிட்ட ஃப்ட்நாவிஸ், ?‘முட்டுக்கட்டைக்கு தீர்வு காணப்பட்டு விரைவில் அரசு அமையும்‘ என்றார்.
அதே பகுதிக்கு சென்று விவசாயிகளை சந்தித்த உத்தவ்தாக்ரே, ‘ சிவசேனா புதிய அரசை அமைக்குமா என்பது சில நாட்களில் தெரியும்‘ என்றார்.
இரு தரப்பாருமே கவர்னரை சந்திக்கவுள்ளதுதான் இப்போதைய ‘ஹாட்’ தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here