வாலிபர் கொலை: கஞ்சா போதையில் அதே இடத்திலேயே சுற்றி சிக்கிக்கொண்ட வாலிபர்

0
1340

மதுரை மாவட்டம் வரிச்சியூரை அடுத்த குன்னத்தூரில் உள்ள பயன்பாட்டில் இல்லாத கழிப்பறையில் அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க இளைஞரை கஞ்சா போதை கும்பல் கொடூரமான முறையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொடூரமான முறையில் படுகொலை செய்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருப்பாயூரணி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விசாரணைக்கு சென்றபோது

, குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த பூவலிங்கம் என்ற 19 வயது வாலிபர் அளவுகடந்த கஞ்சா போதையில் உடலில் ரத்தக் கறையுடன் அங்கு உலவி வந்தார். அவரை பிடித்து

விசாரணை நடத்தியதில் இந்த சம்பவத்தில் 7 பேர் வரையில் ஈடுபட்டிருக்கலாம் எனவும், தொடர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற 6 பேர் தப்பிய நிலையில், போலீசாரிடம் சிக்கிய பூவலிங்கத்திடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here