டைம் ஆகுது , டிசிசன் எடுக்க காணோம்…

0
855

ரோசனைதான் பெருசா இருக்கு. காரியத்த சாதிக்க காணோம்னு மும்பைகாரங்க பெருமூச்சு விடுறாங்க. அவங்கவுங்க தலைவர்களை சந்திச்சி தலய பிச்சுக்குறாங்க.
ஃப்ட்நாவிஸ் அமித்ஷாவை சந்திக்கப்போக, சரத் பவார் சோனியாவை பார்த்து பேசிட்டு வந்திருக்கார். ஒருத்தரும் சாதகமான பதிலை சொல்லல. பவார் கூட, இன்னமும் எதிர்கட்சி பல்லவியதான் பாடுறாரு. ஆனா, தன்னை சிவசேனாக்காரங்க சந்திச்சு சம்சாரிச்ச சமாச்சாரத்த அன்னையிடம் ஒண்ணுவிடாம சொல்லிட்டதாத்தன தெரியுது. தங்களுக்கு ஒரு கண்ணு போனாலும் எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகணும்ங்குறதுதான் காங்குரசுக்கும் ஆசயா இருக்கு.
சிவசேனாவாவது, 5ஃபிப்டி, ஃபிப்டி சீரா பாஜகவுக்கு டேஸ்டாக இல்லங்குறப்போ, மேட் ஆங்கிளா ஒரு முடிவுக்கு வரலாம். ஆனா, அங்கேயும் டிரையாங்குலர் சிக்கல்.
ஆனா ஆளாளுக்கு ‘தல’கள மீட் பண்ண சிவசேனாத்தான் காபி வித் கவர்னர் சம்பிரதாயத்த கடைபிடிச்சிருக்கு. அமித்ஷாவ ஃப்ட்னாவிஸ் சந்திக்கும்போது அவங்களுக்கு சின்னதாக் ஷாக் அடிக்கணும்னு அவங்க பிளான்.
நாலு கட்சி காரங்களோட நாலு வித ரோசனை கவர்னருக்கு ரோதனையா போச்சு. வர்ற 13ஆம்தேதிக்குள்ள சட்டமன்ற ஆயுசு முடியுறதால புது ஆட்களை அமர்த்தணும்ங்குறது அவரு கவல. கட்சிக்காரங்க சிந்தனையோ, யார உட்கார வைக்கலாம்குறத விட்டுட்டு, யார தள்ளிவிடலாம்ணு ஓடுது. எப்படி பார்த்தாலும் இப்போதைக்கு முடிவு எடுக்க மாட்டங்க. தேவைன்னா சோனியாவ மறுபடியும் சந்திப்பேன்னு பவார் சொல்றத பார்த்தா டேர்ம்ஸ் அன்ட் கன்டிஷன்லதான் இழுப்பு போல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here