திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் அமைந்துள்ள பொதுப்பாணித்துறை வளாகத்தில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடக்கிறது. அதையொட்டி இங்கு வந்த குழு செயலர் நவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள் கல்லணையை பார்வையிட்டனர். அவர்களுடன் தமிழக சேர்மன் சுப்பிரமணியனும் சென்றார்.
அங்குள்ள ஆய்வு மாளிகையில் குழுத்தலைவர் ஆவணங்களை சரிபார்த்தார். குழுவினரை சந்தித்த விவசாயிகள், காவிரி ஆணைய தலைவரை நியமிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என மனு அளித்தனர்.














