குமரி மாவட்டம் தாழக்குடியை சேர்ந்த சடையன் நாகர்கோவில் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி தேவி. இவர்களுக்கு 3 வயதில் வீரம்மாள் என்ற மகள் இருக்கிறாள். சம்பவத்தன்று தேவி தனது மகளுடன் நாகர்கோவில் வந்தார். இரவு வெகுநேரமானதால் மகளுடன் அவர் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் தூங்கினார். காலையில் எழுந்து பார்த்தபோது மகளை காணவில்லை.
இது குறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமி கடத்தப்பட்ட நாளில் பஸ் நிலையத்தில் தங்கியிருந்தவர்கள் யார், யார்? என்று விசாரணை நடத்திய போது,
நெல்லை மாவட்டம் நாங்குனேரி- தோவனேரி பகுதியை சேர்ந்த ராஜி (28) என்ற பெண் சிறுமி காணாமல் போன நாளில் இருந்து மாயமாகி இருந்ததால் போலீசார் தேவனேரிக்கு சென்று,
ராஜியையும், அவரிடம் இருந்த வீரம்மாளையும் மீட்டு நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். பின்னர், போலீசார் ராஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.