மதுரை திருநகர் முல்லை நகரை சேர்ந்தவர் குமார்( 52) .இவர் மதுரை அரசு டவுன் பஸ்ஸில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை செய்த டவுன் பஸ் தெற்கு வாசல் வழியாக சென்ற போது பஸ்ஸில் பயணம் செய்த வாலிபரை டிக்கெட் எடுக்கும்படி கூறியுள்ளார். அதற்கு மறுப்புத்தெரிவித்த வாலிபர் ,கண்டக்டரை ஆபாசமாக பேசி தாக்கினார்.
இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்து தெற்கு வாசல் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அவர்,அவனியாபுரம் எம் எம் சி காலனி ராஜா மகன் ஜீவா ( 19 )என்று தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.











