மதுரையில் கந்து வட்டி கொடுமையால் உணவக உரிமையாளர் தற்கொலை

0
508

மதுரையில் கொரோனா ஊரடங்கில் தொழில் முடங்கிய நிலையில்,கந்துவட்டிகாரர்கள் கொடுத்த தொல்லையால்,வீடியோ பதிவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அவரது இரு குழந்தைகள் பரிதவிக்கின்றன.

மதுரை மாநகர் மகபூப்பாளையம் அன்சாரிநகர் 7ஆ வது தெருவில் வசிக்கும் முஹமது அலி என்பவர் திருமணமான நிலையில் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்துவருகிறார்.

அதே பகுதியில் உணவகம் வைத்து நடத்திவரும் இவர் கடையை மேம்படுத்துவதற்காக தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலமாக செல்வக்குமார் என்பவரிடம் இருந்து 3லட்சம் வரை கடனாக பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக உணவகம் மூடப்பட்ட நிலையில் போதிய வருமானம் இல்லாததால் கடனை திரும்ப செலுத்த இயலாத நிலையில் கடன் கொடுத்தவர்கள் தொடர்ச்சியாக கூடுதல் வட்டி கேட்டு தொல்லை அளித்துள்ளனர்.

வாங்கிய தொகையை விட அதிகளவு பணம் செலுத்திய நிலையிலும் தொடர்ச்சியாக வீட்டிற்கு வந்து தொந்தரவு அளிப்பதாகவும்

தனது தற்கொலைக்கு அவர்களே காரணம் என கூறி நேற்றிரவு வீடியோ வெளியிட்டுவிட்டு முஹம்மது அலி தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து அவரது உடல் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கு முன்பாக இளைஞர் வெளியிட்ட வீடியோவில் தனக்கு வட்டிதொகையை கேட்டு செல்வக்குமார் அவரது கூட்டாளிகள் ஜெய்சிங், மாரிமுத்து உள்ளிட்ட சிலர் தொடர்ந்து தொல்லை அளித்து இழிவுபடுத்தியதாகவும், தனது நண்பர்கள் உதவிய நிலையிலும் வட்டிதொகையை கட்ட முடியாமல் தற்கொலை செய்வதாகவும், தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க அந்தம் என்றும்,தனது உயிரிழப்பிற்கு பின் தனது மனைவிக்கோ நண்பர்களுக்கோ தொல்லை தரக்கூடாது என தெரிவித்துள்ளார்.

கந்துவட்டி தொல்லையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள் தவித்துவருவது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரின் தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here