குழந்தைகள் விளையாட்டு, படிப்பு என்றிருக்கும் வயதில் ஒன்பது வயது சிறுவன் புனேவைச் அத்வைத் பார்தியா கிளிமாஞ்சாரோ மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார் இந்த மலை அடிவார முகாமில் இருந்து 4,900 மீட்டர் தொலைவிலும் கடல் மட்டத்தில் இருந்து 5,885 மீட்டர் உயரத்திலும் உள்ளது. இது ஆப்ரிக்காவிலேயே மிக உயரமான மலையாகும். அத்வைத் ஏழு நாட்களில் இந்த மலை சிகரத்தை அடைந்துள்ளார்
இதற்காக அத்வைத் ஒரு மணி நேர நீச்சல் பயிற்சி, இதயம் மற்றும் ரத்த நாளங்களுக்கு பயிற்சியளிக்கும் விதமாக கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடுவது ராணுவத்தில் தடைகளைக் கடந்து செல்வதற்கு அளிக்கப்படும் பயிற்சிகளையும் 100 மாடிகள் ஏறும் பயிற்சி என இரண்டு மாதங்கள் தீவிரமாக பயிற்சி செய்த பிறகுதான் மலை உச்சியை சென்றடைந்ததாக தெரிகிறது.
சிம்பம் டோட்டோ (குட்டி சிம்பா) என்றழைக்கப்படும் அத்வைத் பயணத் தலைவர் சமீர் பாதத்தின் மேற்பார்வையில் மலையேற்றத்தை அவர் மேற்கொண்டார் மலையேற்றம் என்பது எளிதாக செயல் அல்ல. 21 முதல் 25 டிகிரி செல்ஷியஸ் வரையிலான வெப்பநிலையில் மலையேற்றம் மேற்கொண்ட போது இந்த அத்வைத்க்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாம் “நான் மலையேற்றத்தை விரைவாக முடித்திருப்பேன். ஆனால் மலைகள் மிகவும் அழகாக காட்சியளித்தது. அத்தகைய அழகை ரசிப்பதற்காக இடையிடையே நேரம் ஒதுக்கினேன்,” என்றான் அத்வைத் குழந்தைத்தனமாக….