ஸ்ரீவைகுண்டம் காங். வேட்பாளர் அலுவலகத்தில் ரெய்டு

0
1368

தமிழ்நாட்டில் தேர்தல் கால வருமான வரித்துறை ரெய்டு சூடு பிடித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் விஜ­ய­பாஸ்­க­ரின் சகோ­த­ரர் உத­ய­குமா­ரின் உத­வி­யா­ளர் வீட்­டில் 13 மணி நேரம் சோதனை நடத்தினர். உத­ய­கு­மா­ருக்­குச் சொந்­த­மான தனி­யார் கல்­லூரியில் உத­வி­யா­ள­ரா­கப் பணி­பு­ரிந்த வீரபாண்டி வீட்டில் நள்­ளி­ரவு வரை நடந்த சோதனையில் ரூ.50 லட்­சம் பண­மும் முக்­கிய ஆவ­ணங்­களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மணப்பாறை தொகுதியில் போட்டியிட்ட சந்திசேகர் பினாமியான ஒப்பந்ததாரர் தங்கபாண்டியன் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

திருவண்ணாமலையில் முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலு வீட்டிலும், கரூர் சட்டமன்றத் தொகுதியின் சுயேட்சை வேட்பாளர் ராஜேஷ் கண்ணன் அலுவலகத்திலும் முன்னதாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்றது.

நேற்று ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் தேர்தல் அலுவலகத்தில் சோதனை நடந்தது. 6 மணி நேரம் தொடர்ந்து நடந்த சோதனையில் 5.17 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here