படேல் பிறந்தநாளில் லடாக் கவர்னர் பிரமாணம்

0
699

இந்தியாவுடன் சமஸ்தானங்களை இணைத்த சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளன்று அடையாளப்பூர்வமாக ஜம்மு காஷ்மீர் இரு யூனியன்களாக தனித்தனி ஆளுநர்கள் நிர்வாகத்தின்கீழ் வருகின்றன.
லே லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்தூர் இன்று பதவி ஏற்றார். உயர்நீதிமன்ற நீதிபதி கீதா அவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்துள்ளார்.
இதே சமயத்தில், குஜராத் நர்மதா ஆற்றங்கரையில் உள்ள வல்லபாய் படேல் சிலைக்கு இன்று பிரதமர் மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது மாநில, மத்திய காவல் படையினரின் சகச நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாட்டில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித், படேல் படத்துக்கு மரியாதை செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here