போராடும் மருத்துவர்களுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை

0
1605

தமிழக முதலமைச்சர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, ‘ சுஜித் மீட்பு நடவடிக்கைக்கு அதிகாரிகள், அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டு பணிபுரிந்தனர். இது குறித்து ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார். அதை விட்டுவிட்டு ஆலோசனைகள் கூறவேண்டும்.
அங்கீகாரம் இல்லாத மருத்துவர் சங்கத்தினரே போராடுகின்றனர். அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தவேண்டுமென்று நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வேலைக்கு வரமாட்டோம் என்று பிடிவாதம் பிடித்தால் அரசு பார்த்துக்கொண்டு சும்மயிருக்காது. ஏற்கனவே சுகாதார அமைச்சர் அறிவித்ததுபோல் தொடர்ந்து போராடும் மருத்துவர் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்படும்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here