சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ஜானகிராமன் ஐசிஎப் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். ராஜாமங்கலம் பகுதியில் உள்ள இளங்காளியம்மன் கோயில் குழு தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் இன்று பணி நிமிர்த்தமாக கௌத்தூர் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டிசாய்த்தனர். உடன் சென்ற தயாபரன் என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
ஜானகிராமனை அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜானகிராமன் உயிர் இழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பெரவள்ளூர் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












