பாஜக எம்பி சாக்ஷி மகராஜ் சர்ச்சையான பேட்டி மூலம் அயோத்தி வழக்கில் அனல் மூட்டியுள்ளார்.
உத்தரபிரதேசம் உன்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் இன்னும் 15, 20 நாட்களில் ராமர் கோயிலுக்கு சாதகமாக முடிவு வரும் என நம்புகிறேன். வரும் டிசம்பர் 6ல் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கும்’ என்றார்.
இதற்கு முன்பு உத்தரபிரதேச தியோபான்ட் நகர பாஜக தலைவர் கஜ்ராஜ் ரானா, ‘ தீபாவளிக்கு வெள்ளி பொருட்கள் வாங்குவதை விட, இரும்பு வாட்களை வாங்குங்கள்’ என்று தொண்டர்களை உசுப்பேற்றினார்.
இவர்களை மிஞ்சும் வகையில் மும்பையை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் கிரிபா சங்கர்சிங் ஒரு செங்கலோடு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ‘ அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு இந்த செங்கலை பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












