திருநெல்வேலியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது காட்டாம்புளி கிராமத்தில் குளம் கண்மாய்கள் தூர்வாரும் திட்டத்தின்கீழ் பணிகள் நடைபெறுகின்றன.
இந்தக் குளக்கரையில் சுடலை மாட சுவாமி மற்றும் இசக்கியம்மன் கோயில்களுக்கு இடையில், தற்போது வேலை நடைபெறும் பகுதியில் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வாமன கல் (குடையை கையில் ஏந்திய வாமன உருவம்)கிடைத்துள்ளது.
இது வைணவ கோயில்களில் அதன் எல்லையை குறிக்க பயன்படுத்தும் கல் ஆகும். நீண்ட காலமாக மண்ணுள் புதைந்து கிடந்தும் அந்த கல்லில் பொறித்துள்ள உருவம் புதிது போலவே தோன்றுகிறது. தொல்லியல் துறை அதிகாரிகள் இந்த வாமன கல்லை ஆய்வு செய்ய வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.