இலங்கையில் இருந்து பயங்கரவாதி மதுரை காவல் நிலையத்துக்கு மர்ம தகவல்

0
502

மதுரை திடீர் நகர் காவல் நிலையத்திற்கு இன்று மாலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 3பேர் இலங்கையிலிருந்து பயங்கர ஆயுதங்களுடன் கடல்வழியாக கள்ளதோணி மூலமாக ராமேஸ்வரத்தில் இறங்கி தமிழகத்தில் நுழைய முயல்வதாக அது தெரிவித்தது.

தனக்குத் தெரிந்த தகவல்களை கூறியதாக சொல்லி போன் இணைப்பை அவர் துண்டித்துள்ளார். இதனையடுத்து காவல்நிலையத்திற்கு வந்த தொலைபேசி எண்ணின் விவரங்கள் குறித்து கியூ பிரிவு பிரிவு போலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது அவர்கள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

தொலைபேசி உரையாடல் குறித்து உண்மைதன்மையை போலிசார் ஆராய்ந்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here