கடந்து 2019 ஆம் ஆண்டு அய்யபாக்கத்தை சேர்ந்த தொழிலதிபரான ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடத்தி சொத்துக்களை அபகரித்ததாக கைது செய்யப்பட்ட இந்து மகாசபை தலைவர் ஸ்ரீயின் கொட்டம் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்ற நிலையிலும் அடங்கவில்லை.
ஸ்ரீயை மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்புக்கு சிபிசிஐடி போலீசார் அழைத்து வந்த
போது செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சி செய்தியாளரின் மொபைல் போனை பறித்து அநாகரிகமான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து தாக்க முற்பட்டனர்.
மேலும் நியூஸ் 18 தமிழ்நாடு ஒளிப்பதிவாளர் வைத்திருந்த கேமராவை கீழே தள்ளிவிட்டு சேதப்படுத்தினர்.
வெவ்வேறு வழக்குகளுகாக அங்கு வந்திருந்த காவல்துறையினரிடம் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளர் தங்களின் உடமைகளுக்கும், உயிருக்கும் பாதுகாப்பு கொடுங்கள் என கேட்டபோது, ‘சாரி சார் இது எங்க லிமிட் இல்லை’ என்று பின்வாங்கினர்.
பின்னர் சம்பவ இடம் வந்த எழும்பூர் போலீசார், செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து மொபைல் மற்றும் கேமராவை சேதப்படுத்திய கோடம்பாக்கம் ஸ்ரீ-ன் ஆதரவாளர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.