தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் கீழத்தெருவைச் சேர்ந்த ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவரான கார்த்திக்(33) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 18 சிறுவன் ஆகிய இருவரும் இன்று காலை கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையம் சென்று தாங்கள் திட்டங்குளம் ஊராட்சி தலைவர் பொன்ராஜை v(65) கொலை செய்து விட்டதாக கூறினர்.
பொன்ராஜ் கடந்த1986ஆம் ஆண்டு முதலே திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தார். ஊராட்சி மன்ற தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டபோது, அவரது மனைவி பொன்னுத்தாய் வெற்றி பெற்று தலைவராக பணியாற்றினார். மேலும், பொன்ராஜ் எப்போதும் தலைப்பாய் கட்டுடன் இருப்பதால் அவரை தலைப்பாய் கட்டு தலைவர் என்று ஊர் மக்கள் அழைப்பது வழக்கம்.

அவ்வளவு பிரபலமான வரை கொலை செய்ததாக இருவர் வந்து கூறியதும் அதிர்ச்சியடைந்த போலீசார், டி.எஸ்.பி. வெங்கடேசனுக்கு தகவல் கூற, அவர் காவல் ஆய்வாளர்கள் சுஜித் ஆனந்த், கிங்ஸ்லி தேவானந்த் மற்றும் போலீஸாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்தார். அங்கு பாஜக இளைஞரணி தலைவரும் சிறுவரும் கூறிய படி பொன்ராஜ் கொலையுண்டு கிடந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொன்ராஜ் இன்று காலை ஊராட்சி மன்ற அலுவலகம் சென்று விட்டு, மதியம் 12 மணிக்கு மேல் தெற்கு திட்டங்குளம் விஜயாபுரி சாலையில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்றுள்ளார் . அங்குள்ள மரத்தின் கீழ் அமர்ந்திருந்தபோது, பொன்ராஜை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

பாஜக இளைஞரணி தலைவர் கூறியதுபோல் அவரும் சிறுவரும் சேர்ந்துதான் பொன்ராஜ் கொன்றார்களா இல்லை வேறு யாரும் கூட்டுச்சதி புரிந்தனரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
.
பொன்ராஜ் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து, அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அப்பகுதியில் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பொன்ராஜ் கடந்த 1986-ம் ஆண்டு முதல் திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.









