இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு

0
1343

இலங்கையில் வரும் நவம்பர் 16 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான எஸ்எல்பிபி கட்சி கோத்தபயே ராஜபக்சே தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளர் என்று அறிவித்துள்ளது. அதேபோல், அனுரா குமாரா திஷனாயகேவும் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் போட்டியிட தயராக உள்ளார்.

இலங்கையின் பிற பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய முண்னணி மற்றும் எஸ்எல்எப்பி ஆகிய கட்சிகள் இன்னும் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பெயரை அறிவிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here