சிதம்பரம் காவல் நீட்டிப்பு

0
448

ஐஎன்எக்ஸ் மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரது காவலை அக்டோபர் 30ஆம்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இடையில் உடல்நலக்கோளாறு ஏற்பட்டால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.
இதற்கிடையே சிதம்பரத்தின் ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனு மீது விளக்கம் அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு நவம்பர் 4ஆம்தேதி வழக்கை நீதிபதி சுரேஷ் கைத் தள்ளிவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here