கிருஷ்ணகிரியில் ரகளை: விஜய்  ரசிகர்கள் 30 பேர் கைது

0
668

தீபாவளியையொட்டி ரிலீசான ‘பிகில்’ படத்தின் சிறப்பு காட்சி கிருஷ்ணகிரியில் இன்று காலை  நடத்தப்படவில்லை. அதனால் நேற்று மாலை முதலே தியேட்டர்களில் குவிந்த விஜய் ரசிகர்கள் கோபமடைந்தனர்.  தியேட்டர் முன்பு கோ‌ஷமிட்டு ரகளை செய்தனர். 5 ரோடு ரவுண்டானா பகுதியில் போராட்டம் செய்தனர்.

அப்போது ரவுண்டானாவில் உள்ள போலீசாரின் தடுப்புகளையும் சிசிடிவி கேமிராக்களையும் உடைத்தனர். கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர்.  விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர்.
கூடிநின்ற விஜய் ரசிகர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். ரகளையில் ஈடுபட்டதாக விஜய் ரசிகர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here