சாத்தான்குளம் அருகே மீரான்குளத்தை சேர்ந்தவர் கோயில் பிள்ளை மகன் அதிசயராஜ்( 56). இவருக்கும் மீரான் குளம் சேகர தலைவர்செல்வ பாரதிக்கும் மீரான்குளம் நடுநிலைப்பள்ளியில் ஆர்ச் அமைப்பது தொடர்பாக குழு மோதல் ஏற்பட்டது. .
சேகரத் தலைவர் தரப்பினர் அளித்த புகாரின் பேரில் அதிசயராஜ் உள்ளிட்ட 5 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் மற்றொரு தரப்பினர் அளித்த புகார் மீது சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் எதிர் தரப்பினர் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யக்கோரியதின் அடிப்படையில் மீரான்குளம் நடுநிலைப்பள்ளி தாளாளரும் சேகரத் தலைவருமான செல்வ பாரதி மற்றும்
சாமுவேல் மகன் டேனியல்( 53),
புண்ணியம் மகன் கோயில் பிச்சை (65),மாசிலாமணி மகன் மிகாவேல்( 46),
மிகாவேல் மனைவி மேனகா (40)
யோசேப்பு மகன் பாக்கியராஜ் (45)
ரத்தினசாமி மகன் சுதாகர் பெஞ்சமின் (55), சுதாகர் பெஞ்சமின்மனைவி
பாக்கிய செல்வி( எ) ஜெபசீலி மரியாள் (49),செல்லத்துரை மகன்
யாக்கோபு (49),பாக்யராஜ் மகன்
ரவி ஜக்கிஸ் (25) ஆகிய 10 பேர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் முத்து விசாரணை நடத்தி வருகிறார்.








