தமிழ் திரைப்படத் துறையில் துணை நடிகராக வலம் வருபவர் மங்கள நாத குருக்கள். இவர் இன்று வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
அதில், உயிரோடு இருக்கும் தன்னையும் தன் குடும்பத்தாரையும் இறந்துவிட்டதாக கூறி, அடக்கம் செய்ய பணம் கேட்டு சமூக வலைத்தளம் மூலம் சிலர் பணம் வசூலிப்பதாகவும், நபருக்கு 2,500 வீதம் சிலரிடம் பெற்றிருப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.