வெள்ளூர் அருகே நவ்வலடிவிளையை சேர்ந்த தனிநபர் ஒருவரின் தோட்டத்தில் இருந்த 500 வாழைமரங்களை வெட்டியதாக கூறி தோட்டம் உரிமையாளர் தரப்பில் நேற்றைய தினம் ஸ்ரீவைகுண்டம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் வெள்ளூரைச் சேர்ந்த இளஞ்சிறார் ஒருவருக்கு இது தொடர்பாக சம்மன் அனுப்பி காவல்நிலையத்தில் ஆஜராக அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அந்த இளஞ்சிறார் சம்பந்தப்பட்ட நாளில் ஊரில் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் சிறிது நேரத்திற்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அந்த இளஞ்சிறார் சம்பவம் நடந்த நாளில் தூத்துக்குடியில் இருந்ததாகவும், அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் போலீசாரிடம் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் முறையான விசாரணை மேற்கொண்டு உரிய விசாரணை நடத்துவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு கூடியிருந்த பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் காவல்நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது









