கோவை கருமத்தம்பட்டி அடுத்த சோமனூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தனிப்படை போலீசார் சோமனூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ஒரு குடோனில் சோதனை மேற்கொண்ட போது அங்கு மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து அங்கு இருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மோதிலால் (40) மற்றும் சீதாராம்(36) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது வட மாநிலத்திலிருந்து 1,100 கிலோ குட்கா கடத்தி வந்ததும் சோமனூர், கருமத்தம்பட்டி, அன்னூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இதனை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. கருமத்தம்பட்டி போலீசார் இருவரையும் கைது செய்து தனிப்படை போலீசார் சிறையில் அடைத்தனர்.

இவர்கள் ஏற்கனவே மோப்பிரிபாளையம் பகுதியில் உள்ள மேட்டுக்காடு என்ற தோட்டத்தில் கடந்த ஒரு வருடம் முன்பு சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு மாநகர போலீசார் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.















