கொரோனா என்னும் கொடிய வைரஸ் இலட்சக்கணக்கானோரின் உயிரை குடித்துவிட்டு இன்னும் உலாவிக்கொண்டிருக்கிறது. இது செயற்கையாக உருவாக்கப்பட்ட மருத்துவ வதந்தி என்பாரும் உள்ளனர்.
கொரோனா தடுப்பூசி மருந்து ஆராய்ச்சி, தயாரிப்பில் பல்லாயிரம் கோடி ரூபாய் ஆதாயம் பார்த்தவர் உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ். கொரோனா வைரசின் அடுத்து வரும் உருமாற்றம் பயங்கரமாக இருக்கும் என்று சமீபத்தில் தான் அவர் பீதியூட்டியிருந்தார்.
இந்நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், தனி பங்களாவில் ஓய்வெடுப்பதாகவும் செய்தி வந்துள்ளது. தடுப்பூசி மருந்தின் தந்தையான அவர் கட்டாயம் தடுப்பூசி போட்டிருப்பார். அவருக்கு எப்படி கொரோனா வந்தது? அப்படியானால் அது தடுப்பூசியா, தப்பூசியா என்று உலக மனித சமூகமே முடியை பிய்த்துக்கொண்டிருக்கிறது.















