சபரி மலை தீர்ப்பில் சுவாமி ஐயப்பனின் பங்கு

0
948

சபரி மலை தீர்ப்பில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா குறிப்பு முக்கிய அம்சமாக இருக்கும் என வழக்கறிஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சபரி மலையில் 10 முதல் 50 வயது வரையான பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீது சீராய்வு மனு விசாரணை நடந்து இன்று தீர்ப்பு வரவுள்ள நிலையில், கடந்த முறை நீதிபதி இந்து மல்ஹோத்ரா குறிப்பிட்டிருந்த அம்சம் இதில் முக்கியத்துவம் பெறும் என வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நீதிபதி இந்து மல்ஹோத்ரா வழக்கில் சுவாமி ஐயப்பனையும் சட்ட உரிமை பெற்றவராக கருதவேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார். சமீபத்தில் வந்த அயோத்தி தீர்ப்பில் குழந்தை ராமர் தீர்ப்புரிமை பெற்றிருந்த நிலையில், சீராய்வு தீர்ப்பில் சுவாமி ஐயப்பனும் சட்ட உரிமை பெற்றவராக கருதப்பட்டால் அவருக்கே உரித்தான தனிப்பட்ட வழிபாட்டு நடைமுறையை கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த நேரிடும் என வழக்கறிஞர் கல்யாண் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here