சிவகங்கை காஞ்சிரங்கால் ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்துகொண்டனர்.
பின்னர் நோய்த்தொற்று தடுப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம்,' மன அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் அதிகம் பேர் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன . இதனை குறைப்பதற்காக தமிழகம் முழுவதும் மக்களைத் தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கிி வைக்க உள்ளார். இத்திட்டத்தின் மூலம் ஆரம்ப சுகாதார நிலையம், கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் இருந்து மக்களின் இல்லங்களை தேடி ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகள் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு அவர்களின் இல்லம் தேடி சிகிச்சை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் 2 ஆண்டுகளில் நிறைவேறும். இத்்திட்டத்தினை முதல்வர்15 நாட்களில் தொடங்கி வைக்க உள்ளார்,' என தெரிவித்தார்.