நாளை முதல் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் கடை திறப்புக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி நாளை டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நெருக்கியடிக்காமல் கட்டுப்படுத்த தடுப்பு வேலிகள் அமைக்கப்படவேண்டும். இடைவெளியை கண்காணிக்க இரு பணியாளர்கள் நியமிக்கப்படவேண்டும். மதுப் புட்டிகள் மொத்த விற்பனை செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












