தீபாவளியை முன்னிட்டு ஒப்பந்தக்காரர்களிடம் திருச்செந்தூர் பிடிஓ மற்றும் ஊழியர்கள் வல்லிய வசூலில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் சென்றதையடுத்து தூத்துக்குடி டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் போலீசார் நேற்று மாலை 6.15க்கு சோதனையிட்டனர். இன்று அதிகாலை வரை சோதனை நடந்தது. அதன்பின்பே பிடிஓ மற்றும் ஊழியர்கள் விடுவிக்கப்பட்டனர்.
‘ ரூ.2.25 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. சோதனை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். அவர்கள் ஆலோசனைக்கு பின்பு நடவடிக்கை எடுக்கப்படும்’ என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.











