‘பசிச்சா எடுத்துக்குங்க’ காங்கிரசார் வைக்கும் பார்சல் சாப்பாடு

0
1349

திருப்பரங்குன்றம் பகுதியில்,’ பசித்தால் எடுத்துக்கொள்ளுங்க ‘என்று
தினமும் 400 உணவு பொட்டலங்களை
திருப்பரங்குன்றம் பகுதியில் 3 இடங்களில் காங்கிிிரஸார் வைக்கின்றனர்.

குறிப்பாக,திருநகர் 5 வது பஸ் நிறுத்தம் அருகே மதியம் மற்றும் இரவு நேரங்களில் உணவு இல்லாதவர்களுக்கு உணவு வைக்கப்படுகிறது,
அதனை, ஏழை, எளியோர் மற்றும் அதரவற்றோர் உணவு பார்சல் எடுத்துச் செல்கின்றனர்.


காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியின் இளைஞர்களாக ஒன்று சேர்ந்து தினமும் தக்காளி சாதம், புளியோதரை,பிரியாணி போன்ற உணவுகளை தயார் செய்து வைக்கின்றனர்.


தற்போது, கொரானா இரண்டாவது அலை காரணமாக சாலைகளில் உணவின்றி தவிக்கும் ஏழை எளியோர் மற்றும் ஆதரவற்றோர்களுக்காக உணவு தயார் செய்து மதியம் மற்றும் இரவு நேரங்களில்

உணவு பொட்டலங்கள் வைக்கின்றனர்.

தனக்கன் குளம் மொட்ட மலை, திருப்பரங்குன்றம் பழங்குடி நகர் பகுதிகளிலும் சாப்பாடு பொட்டலங்கள் வைக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here