காணாமல் போன பள்ளி மாணவி சாக்கு மூட்டையில் பிணமாக கண்டெடுப்பு

0
791



கோவை சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரம் யமுனா நகர் பகுதியில் உள்ள குப்பைகளை அள்ளும் துப்புரவு பணியாளர் இன்று குப்பைைைை அள்ளிய போது அங்குள்ள புதரில் ஒரு சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வருவதை அறிந்து மூட்டையின் அருகில் சென்று பார்த்தார். சாக்குமூட்டையில் ஒரு மனித உடல் இருப்பதை கண்டு அங்குள்ள பொதுமக்களிடம் கூறவே உடனே சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்தபோது வாய் மற்றும் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அழுகிய நிலையில் ஒரு பெண் சடலம் கண்டு கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கடந்த சனிக்கிழமை அன்று சிவானந்தபுரம் மாருதி நகர் பகுதியைச் சேர்ந்த கலைவாணி என்பவரது 15 வயது இரண்டாவது மகள் காணாமல் போனது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் விசாரணை செய்ததில் சாக்கு மூட்டையில் இருந்த உடல் அவரது மகள்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் கடந்த 8 வருடங்களாக தனது கணவர் ராஜேந்திரனை பிரிந்து வாழ்ந்துவரும் கலைவாணி தனது இரு மகள்களுடன் மாருதி நகர் பகுதியில் கூலி வேலை செய்து வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தனது 2வது மகள் கார்த்திகா (15) வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என்று புகார் அளித்திருந்தார்.

தற்போது காவல்துறையினர் சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here