கன்னடர்களுக்கே முன்னரிமை… எடியூரப்பா

0
1289

சுதந்திரதின விழா இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா பெங்களூரு மானேக்‌ஷா அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முதல்-மந்திரி எடியூரப்பா தேசிய கொடியை ஏற்றி போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். அதன் பிறகு எடியூரப்பா சுதந்திர தின உரையாற்றினார். அப்போது அவர் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கலாசாரம், பண்பாட்டை கொண்ட கர்நாடகம், செல்வ செழிப்புள்ள பாரம்பரியம் கொண்டது.

கர்நாடகத்தில் வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கான பிரதிநிதித்துவம் குறைந்து வருவதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது. கர்நாடகத்தில் வேலை வாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பது எனது அரசின் நிலைப்பாடு. அரசின் கொள்கையும் இது தான்.

மாநில மக்களின் உணர்வுகளை எங்கள் அரசு மதிக்கிறது. கன்னடர்களின் சுயமரியாதை, கவுரவத்தை காப்பாற்றவும், அவர்களின் வேலைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் வேலை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம் இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here