இந்தியருக்கு நோபல் பரிசு
2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கொல்கொத்தாவில் பிறந்து அமெர்க்காவில் வாழும் அபிஜித் பானர்ஜி உட்பட 3 பேர் பரிசு பெறுகின்றனர்.
அபிஜித் தவிர, எஸ்தர் ட்யூப்லோ, மைக்கேல் கிரம்மெர் ஆகியோர் நோபல் பரிசை பெறுகின்றனர்.
வறுமை ஒழிப்புக்கான அணுகுமுறைகளை பற்றி ஆராய்ந்ததற்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்தர் ட்யூப்லோ பிரான்சில் பிறந்து அமெரிக்காவில் வசிப்பவர். அபிஜித்தின் மனைவி. அபிஜித்தின் ’ வறியவர்களுக்காக பொருளாதாரம்’ நூல் அடிப்படையில் இந்த பரிசு வழங்கப்படுகிறது.